செய்திகள்

சென்ட்ரல்-டெல்லி ஜி.டி.எக்ஸ்பிரஸ் இன்று ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2017-01-09 13:42 IST   |   Update On 2017-01-09 13:42:00 IST
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படக்கூடிய டெல்லி சாரை ரோகில்லா ஜி.டி. எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.15 மணிக்கு புறப்படக்கூடிய டெல்லி சாரை ரோகில்லா ஜி.டி. எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணை ரெயில் தாமதமாக வருகிற காரணத்தால் ரத்தாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ் இணை ரெயில் தாமதமாக வருகிற காரணத்தால் அதிகாலை 2 மணிக்கு (10-ந் தேதி) புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மணி நேரம் தாமதமாக இந்த ரெயில் புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Similar News