ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம்
ஜெயங்கொண்டம்:
500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என அறிவித்த மத்தியஅரசின் பொருளாதார சீர்குலைவை கண்டித்து நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜெயங்கொண்டம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் செங்கமுத்து தலைமை வகித்தார். ஐ.என்.டி.யூ.சி. அரியலூர் மாவட்ட தலைவர் தமிழ்மணி, மாவ ட்ட பொது செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் உத்தி ராபதி, மாவட்ட இளைஞ ரணி தலைவர் வில்சன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்டதலைவர் சீனிபாலகிருஷ்ணன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பிரச்சாரத்தில் வேல்முருகன், தனஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக ஐஎன்டியூசி மாவட்ட துணைத்தலைவர் பாக்கியராஜ் வரவேற்றார்.
இறுதியில் ஜெயங்கொண்டம் நகர பொது செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
ஆண்டிமடம் கடைவீதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் பாலு, ஜெயங்கொண்டம் தொகுதி தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். இதில் வக்கீல் பிரிவு தலைவர் வேல்முருகன், இளைஞரணி தலைவர் ராஜகோபால் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பெருந்திறளாக கலந்து கொண்டனர்.