செய்திகள்

கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2017-01-05 20:51 IST   |   Update On 2017-01-05 20:51:00 IST
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2804 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர்:

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2804 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  
இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவண வேல்ராஜ் கூறியதாவது: -

இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக கீழ்க் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருப்பதுடன் அக்கல்வித் தகுதி தமிழக அரசின் மருத்துவப்பணிகள் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் அல்லது மிட்வைப்ரி டிப்ளமோ  அல்லது ஹெல்த் விசிட்டர்ஸ் அல்லது ஏ.என்.எம் டிப்ளமோ தகுதி பெற்று தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும். வயது வரம்பு 01.07.2016 அன்று அனைத்து பிரிவினருக்கும் 57 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

இப்பணிக்காலியிடத்திற்கு மாநில அளவு பதிவு மூப்பில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால் தகுதியுள்ள அரியலூர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன்  07.01.2017-க்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News