செய்திகள்

பிள்ளையார்பட்டி அருகே குளத்தில் தவறி விழுந்து என்ஜினீயர் பலி

Published On 2017-01-03 13:30 IST   |   Update On 2017-01-03 13:30:00 IST
பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலை குளத்தில் தவறி விழுந்து சாப்ட்வேர் என்ஜினீயர் பலியானார்.
காரைக்குடி:

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது25). இவர் பி.இ. முடித்து விட்டு சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

பாலாஜி அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டு இருந்தார். அதன்பேரில் இவருடன் 16 பேர் கொண்ட குழுவினர் சபரிமலைக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் குருவாயூர், பவானி, மருதமலை போன்ற இடங்களுக்கு சென்று விட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு வந்து தங்கினார்கள்.

இதில் பாலாஜி மட்டும் இன்று அதிகாலை பிள்ளையார்பட்டி அருகே உள்ள ஒரு குளக்கரை பகுதியில் காலைக்கடனை கழிக்க சென்றார்.

தண்ணீரை ஒட்டியுள்ள பாறையில் இருந்தபடி கால் கழுவியபோது, திடீரென்று பாறை வழுக்கியது. இதில் பாலாஜி ஆழமான பகுதியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரி சோதனைக்காக பாலாஜி யின் உடல் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News