செய்திகள்

திருப்புவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-01-02 23:01 IST   |   Update On 2017-01-02 23:01:00 IST
திருப்புவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை வாலிபர்கள் அரிவாளால் வெட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்புவனம்:

திருப்புவனத்தில் இருந்து பூவந்தி செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலைநகர். இப்பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரதாஸ்(வயது 52). என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயபாலா(47). மகன் செருபா பெல் ஜெயசீலன்(22), சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் பாஸ்கரதாஸ் தனது மனைவி, மகனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இவர்களது வீட்டிற்கு 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் அந்த நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து என்ஜினீயர் பாஸ்கரதாஸ், மனைவி விஜயபாலா, மகன் ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News