செய்திகள்
அரியலூர் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை
அரியலூர் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கொளப்படி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது42). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போது ஜெயலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார்.
கடந்த 30-ந்தேதி தகராறு ஏற்பட்ட போது, ஜெயலட்சுமி வீட்டை விட்டு சென்று விட்டார். இதையடுத்து சண்முகம் மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது சண்முகத்தின் சித்தப்பா வீட்டிற்கு ஜெயலட்சுமி சென்றிருந்தது தெரியவந்தது.
இதனிடையே இன்று காலை ஆண்டிமடம் பகுதியில் உள்ள வயலில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ஜெயலட்சுமி என தெரியவந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயலட்சுமியின் சேலையில் மோட்டார் சைக்கிள் சாவி ஒன்றும், அவர் இறந்து கிடந்த இடம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தின் தடயங்களும் இருந்தது.
இதனால் மர்மநபர் யாரோ ஜெயலட்சுமியை வயல் பகுதிக்கு கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.