செய்திகள்

வத்தலக்குண்டு அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2016-12-30 08:23 GMT   |   Update On 2016-12-30 08:23 GMT
வத்தலக்குண்டு அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அடுத்துள்ள முத்துலாபுரம், செங்கட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவு ஓட்டல்கள் உள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் லாரி மற்றும் கார்கள் சாலையோரம் நிறுத்தி விட்டு ஓட்டல்களில் சாப்பிட செல்வது வழக்கம்.

இதேபோல் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், சபரி மலை செல்லும் பக்தர்கள் ஆகியோரும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் கத்தியை காட்டி ஒரு வாலிபர் பணம் பறித்து வந்துள்ளார்.

இது குறித்து பட்டிவீரன் பட்டி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியபோது வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் மகன் மிதுன் (வயது30) என தெரிய வந்தது. கடந்த சில நாட்களாகவே இதுபோல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்த போலீசார் நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

Similar News