செய்திகள்

சிகிச்சைகாக விமானதில் வந்த மலேசிய பெண் மரணம்

Published On 2016-12-23 15:57 IST   |   Update On 2016-12-23 15:57:00 IST
சிகிச்சைகாக விமானதில் வந்த மலேசிய பெண் பயணி மரணம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

மலேசியாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் மலேசியாவை சேர்ந்த ஜெகன்நாதன் அவரது மகள் யுவனா (37). பயணம் செய்தனர். யுவனா சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.

நடுவானில் விமானம் பறந்த போது யுவனாவுக்கு திடீர் என உடல் நிலை மோசமானது. இதுகுறித்து விமானம் மூலம் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். விமானம் தரை இறங்கியதும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று யுவனாவை பரிசோனை செய்தனர். அப்போது அவர் இறந்தது தெரிய வந்தது.

Similar News