செய்திகள்

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-19 13:48 GMT   |   Update On 2016-12-19 13:48 GMT
கருணாநிதியை சந்திக்க சென்ற வைகோ கார் மீது கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ம.தி.மு.க.வினர் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்:

சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு சென்றார்.

அவருக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து கார் மீது கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது தி.மு.க. ம.தி.மு.க. தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி வந்து விட்டார்.

தி.மு.க.வினரின் இந்த செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் ம.தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் நகர செயலாளர் வாணிபிச்சையா, நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, நிர்வாகிகள் வாணிமுருகன், ராஜமாணிக்கம், இராஜாராம்பாண்டியன், சீனிவாசன், கிருஷ்ணகுமார், மருதையாசாமி, ஆறுமுகசாமி, ராயகிரி சங்கையா, சந்தன பாண்டியன், சுப்பிரமணியன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News