செய்திகள்

ஈரோடு வில்லரசம்பட்டியில் மோட்டார்சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி

Published On 2016-12-19 17:47 IST   |   Update On 2016-12-19 17:47:00 IST
ஈரோடு வில்லரசம்பட்டியில் மோட்டார்சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சர்வாண்(வயது35). இவரது மனைவி லட்சுமிதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு கடைக்கு செல்வதற்காக வில்லரசம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்பாராத வகையில் சர்வாண் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சர்வாணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி சர்வாண் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News