செய்திகள்

ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2016-12-19 17:10 IST   |   Update On 2016-12-19 17:10:00 IST
ஈரோடு அருகே முட்புதரில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள முட்புதரில் 7 பேர் வட்டமாக அமர்ந்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்தும் அங்கிருந்து தப்பிஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 55), பெரியவலசு பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (45), வள்ளியம்மை வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் (60), நாராயணவலசு திருமால் நரை சேர்ந்த ராமன் (46), வீரப்பன்சத்திரம் லால்பகதூர் வீதியை சேர்ந்த ராஜசேகரன் (54), ஜான்சி நகரை சேர்ந்த ஆறுமுகம் (46), சி.என்.சி. கல்லூரி பகுதியை சேர்ந்த நல்லசாமி (63) என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News