செய்திகள்

மதுரையில் 96 மதுபாட்டில்கள் பறிமுதல்: 6 பேர் கைது

Published On 2016-12-19 14:23 IST   |   Update On 2016-12-19 14:23:00 IST
பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிந்தாமணி கண்மாய் கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற கிளி கார்த்திக் (வயது29), பிரேம்குமார் (23) ஆகிய 2 பேரை கைது செய்து 30 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிந்தாமணி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள முனியாண்டி கோவில் அருகே மது விற்றபோது தெப்பக்குளம் போலீசார் கைது செய்து 15 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் மது விற்ற மூர்த்தி (30) என்பவரை கைது செய்து 30 மதுப்பாட்டில்களையும், குலமங்கலம் அய்யனார் கோவில் அருகே மதுவிற்ற குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து 11 மதுப்பாட்டில்களையும், புதூர் பகுதியில் மது விற்ற மால் என்பவரை கைது செய்த போலீசார், 10 மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News