செய்திகள்

நன்னிலம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி மறியல்: கிராம மக்கள் கைது

Published On 2016-12-17 16:29 IST   |   Update On 2016-12-17 16:29:00 IST
நன்னிலம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள கொல்லுமாங்குடியில் பாவட்டக்குடி கிராமத்தில் விளை நிலத்தில் மணல் குவாரி அமைத்ததை மூடக்கோரி சாலை மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மனோகரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலைவாணன், தமிழ்நாடு விவசாய சங்க அமைப்பு தலைவர் ராமமூர்த்தி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ரணியன், மணல் குவாரிக்கு எதிராக மக்கள் இயக்க அமைப்பாளர் முகிலின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழத்தினார்கள்.

இச்சாலை மறியிலில் பாவட்டக்குடி, பண்டார வாடை, கதிராமங்கலம், பனங்காட்டாங்குடி, காளியாக்குடி, பண்ணைநல்லூர், வாளுர், பூரத்தாழர்வார்குடி, சிறுபுலியூர் ஆகிய கிராம மக்கள் பங்கேற்றனர்.

தகவல் அறிந்த நன்னிலம் டி.எஸ்.பி அறிவானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, மணிமாறன், சந்திரா, நன்னிலம் தாசில்தார் சுந்தரவடிவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News