செய்திகள்

ஈரோட்டில் மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

Published On 2016-12-17 16:14 IST   |   Update On 2016-12-17 16:14:00 IST
ஈரோட்டில் மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் மின் வாரிய ஆய்வு மாளிகையில் 21-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகள் கேட்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தலைமையில் வரும் 21-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தனி நபர் மனுக்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கை மனுக்கள் முற்பகலில் பெற்றுக் கொள்ளப்படும்.

எனவே மின் வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News