செய்திகள்

மொடக்குறிச்சி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2016-12-17 15:52 IST   |   Update On 2016-12-17 15:52:00 IST
மொடக்குறிச்சி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி:

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு சிவசங்கரி, சத்தியா உள்பட 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் பெற்றோர் இறந்து விட்டனர்.

சிவசங்கரிக்கு திருமணம் முடிந்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலாங்காட்டுவலசு, காட்டுபாளையம் லோகியா வீதியை சேர்ந்த கணவர் ஜெகதீசனுடன் வசித்து வருகிறார்.

இவர்களுடன் சிவசங்கரியின் தங்கைகளும் வசித்து வந்தனர். இதில் சத்தியா (வயது15) கணபதிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சத்தியாவிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதற்காக பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சத்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சத்தியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News