செய்திகள்

திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய 10 பேர் கைது

Published On 2016-12-17 11:11 IST   |   Update On 2016-12-17 11:11:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பனையம்பட்டி பகுதியில் மஞ்சு விரட்டு நடப்பதாக வாட்ஸ் அப்மூலம் தகவல் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார், திருப்பத்தூர்- கண்டர மாணிக்கம் ரோடு, காட்டாம்பூர், தேவரம்பூர், பனையம்பட்டி, அரளிக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பனையம் பட்டி தம்பை கண்மாய் பகுதியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சுண்டக்காடு பிரவீன்குமார் (25), ஆறாவயல் பூவலிங்கம் (19), சிவரக்கோட்டையை சேர்ந்த 18 வயது வாலிபர், அய்யாபட்டி ஒய்யப்பன் (30), சுண்ணாம்பிருப்பு சேகர் (30), மணமேல்பட்டி செல்லப் பாண்டி (24), கார்த்திக் (25), ஜெயபாண்டி (24), பழனி குமார் (23) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News