செய்திகள்

திருப்புவனம் அருகே மணல் அள்ளி வந்த மாட்டுவண்டிகள் பறிமுதல்

Published On 2016-12-14 13:47 IST   |   Update On 2016-12-14 13:47:00 IST
திருப்புவனம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை வருவாய் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவனியாபுரம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கரிசல்குளம் கண்மாய். இந்த கண்மாயில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக புகார்கள் வந்தன.

இதுகுறித்து சிலைமான் துணை தாசில்தார் பால கிருஷ்ணன், கரிசல்குளம் கிராம நிர்வாக அலுவலர் சேகர், கிராம உதவியாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் கண்மாய் பகுதிகளில் ரகசிய ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 6 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் எடுத்து வருவது தெரியவந்தது. அதிகாரிகளை கண்டதும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டியில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக மக ராஜன், சின்னபாலு, வெற்றி வேல், போஸ் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News