செய்திகள்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள் (வயது70) இவர் முதியோர் ஓய்வூதியம் வாங்குவதற்கு வங்கிக்கு வந்து விட்டு திரும்பி செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.