செய்திகள்

வார்தா புயல் எச்சரிக்கை: நாகையில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Published On 2016-12-11 18:10 IST   |   Update On 2016-12-11 18:10:00 IST
வார்தா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் இன்று காலை 11 மணிக்கு 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கீழையூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29-ந் தேதி தொடங்கியது. ஆனால் இதுவரை கனமழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான வார்தா புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதை தொடர்ந்து சென்னை வானிலை மையம் நாளை (12-ந் தேதி) மாலை வார்தா புயல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மசூதிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

இதையொட்டி காரைக்கால், கடலூர் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கபட்டுள்ளதால் நாகை துறைமுகத்தில் இன்று காலை 11 மணிக்கு 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்கு மின் பிடிக்க செல்லவில்லை.

Similar News