செய்திகள்

மாணவியிடம் அய்யப்ப மாலையை கழற்ற கூறிய பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம்

Published On 2016-12-09 17:38 IST   |   Update On 2016-12-09 17:38:00 IST
திருப்பத்தூர் அருகே மாணவி அணிந்திருந்த அய்யப்ப மாலையை கழற்றும்படி கூறிய பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள திம்மணாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பல்லவி (வயது 11). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வகுப்பு ஆசிரியை மகேஷ்வரி (45), மாணவியிடம் அய்யப்பன் டாலர் மற்றும் இடுப்பில் உள்ள அய்யப்பன் துணியை கழற்றும்படி கூறியுள்ளார்.

இதுகுறித்து பல்லவி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பிரிய தர்ஷினியிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியை மகேஷ்வரியை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

Similar News