செய்திகள்

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2016-12-04 13:20 IST   |   Update On 2016-12-04 13:19:00 IST
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே உள்ள பரனூர், செட்டிபுன்னியம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல சுங்கச்சாவடி அருகேயே தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பஸ்களில் ஏறுகின்றனர்.

சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்வதும், அதனை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களை பயணிகள் நிறுத்த வேண்டாம் என்று செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் தொடர்ந்து அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுங்கச்சாவடி அருகில் நிறுத்தப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணை நடந்து வருகிறது.

சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Similar News