செய்திகள்

அனகாபுத்தூரில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-03 15:23 IST   |   Update On 2016-12-03 15:23:00 IST
அனகாபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம்:

அனகாபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்திநகர், தேவிமூகாம்பிகை நகர், டோபிகானா பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ளன.

அடையாறு ஆற்றை அகலப்படுத்துவதால் கரையோரம் இருந்த வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மாற்று இடமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களது வீடுகளை காலி செய்ய மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று அனகாபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News