செய்திகள்

பெருந்துறை பகுதியில் கருகிய பயிர்களை பார்வையிட்ட அதிகாரி

Published On 2016-11-29 18:06 IST   |   Update On 2016-11-29 18:06:00 IST
பெருந்துறை பகுதியில் கருகிவரும் பயிர்களை மாநில வருவாய் ஆணையர் சத்தியகோபால் ஆய்வு செய்தார்.

பெருந்துறை:

பெருந்துறை,திங்களுர் பகுதிகளில் மானாவாரி நிலக் கடலை 4000 எக்டர் சாகுபடி செய்து வருகின்றனர்.இது முற்றிலும் மழையை நம்பி செய்து வரும் விவசாயம் ஆகும்.

இந்த வருடம் பருவமழை பொய்த்து விட்டதால் நிலக் கடலை, சோளம், பயறு வகை, துவரை போன்ற பயிர்கள் காய்ந்து வருகிறது. பெருந்துறை வட்டாரத்தில் அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழை 591மி.மீ ஆகும்.நடப்பாண்டு அக்டோபர் மாதம் முடிய-263 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. இயல்பு மழை அளவை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிய -328மி.மீ அளவு மழை குறைவாக பெய்து கடும் வறட்சி நிலவுகிறது.

இதனை தமிழ்நாடு வருவாய் ஆணையர் சத்திய கோபால் ஈரோடு மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் இணை இயக்குநர் உள்பட பலர் பார்வையிட்டனர்.

Similar News