செய்திகள்
ஈரோட்டில் கார் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்குக்கு சென்ற தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
அந்தியூர் நேருவீதி, சேர்ந்தவர் காந்திமணி (வயது 54). தொழிலாளி. சம்பவத் தன்று காந்திமணி தனது மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
அந்தியூர்- பவானி பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் காந்திமணி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காந்திமணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.