செய்திகள்

ஈரோட்டில் வாகனம் மோதி கணவர் பலி

Published On 2016-11-24 18:13 IST   |   Update On 2016-11-24 18:13:00 IST
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மனைவிக்கு டீ வாங்க சென்ற கணவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு:

ஈரோடு வளையகார வீதி, வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது52).

கிருஷ்ணன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை சேர்த்திருந்தார். கிருஷ்ணன் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்தனர்.

கிருஷ்ணன் தன் மனைவிக்கு டீ வாங்குவதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து எதிர் புறம் உள்ள ரோட்டை கடந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கிருஷ்ணன் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News