செய்திகள்
கொடுமுடி அருகே கணவர் கண் முன்னே தீக்குளித்த பெண் பலி
கொடுமுடி அருகே கணவர் கண் முன்னே பெண் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுமுடி:
கொடுமுடி அருகே ஊஞ்சலூர், தேவம்பாளையம், பெரியார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி. இவரது மனைவி விஜயா(வயது 42).
சம்பவத்தன்று ஆறுமுகம் டீக்கடைக்கு சென்றுவிட்டு டீக்குடித்துவிட்டு திரும்பி வர நேரமாகி விட்டடதாக கூறப்படுகிறது. விஜயா தனது கணவரை திட்டினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் விஜயா கோபித்து கொண்டு சமையல் அறைக்கு வேகமாக சென்றார்.
அங்கு இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ குளித்தார். இதனால் வேதனை தாங்காமல் விஜயா அலறினார். இதை சற்றும் எதிர்பாராத ஆறுமுகம் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்து விஜயாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி விஜயா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.