செய்திகள்

ரூபாய் நோட்டுகள் திட்டம்: சமைக்க தெரியாதவன் கையில் காய்கறிகள்- தா.பாண்டியன் விமர்சனம்

Published On 2016-11-21 16:42 IST   |   Update On 2016-11-21 16:42:00 IST
ரூபாய் நோட்டுகள் செல்லாது திட்டம் சமைக்க தெரியாதவன் கையில் காய்கறிகள் கொடுப்பது போல் உள்ளது என த.பாண்டியன் பேட்டியில் கூறினார்.

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் இன்று ஈரோடு வந்தார். அவர் பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்கள். இந்த அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.

இதன் நோக்கம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் சமைக்க தெரியாதவன் கையில் காய்கறி, பருப்பு கொடுப்பது போல் இந்த திட்டம் உள்ளது.

தமிழகத்தில் மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது என கேட்டு கொள்கிறேன். இதை போக்க தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News