செய்திகள்

நில புரோக்கர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2016-11-20 23:07 IST   |   Update On 2016-11-20 23:07:00 IST
தொழில் நஷ்டம் அடைந்ததால் நில புரோக்கர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு, பழையப்பாளையம், செல்வம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது55). நில புரோக்கர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி பார்த்து வந்த நில புரோக்கர் தொழில் நஷ்டம் அடைந்தது. இதனால் சில நாட்களாவே கிருஷ்ணமூர்த்தி வேதனையுடன் இருந்துள்ளார்.

அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News