செய்திகள்

அம்மாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி திடீர் மாயம்

Published On 2016-11-19 16:48 IST   |   Update On 2016-11-19 16:48:00 IST
அம்மாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்த அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகள் ரம்யா (வயது14).

சுப்பிரமணியும், வெள்ளையம்மாளும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். காலைலேயே வேலைக்கு செல்பவர்கள் மாலை வருவார்கள்.

ரம்யா 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வீட்டு வேலையை கவனித்து வந்தாள். சம்பவத்தன்று சுப்பிரமணியும், வெள்ளையம்மாளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

ரம்யா மட்டும் வீட்டில் தனியான இருந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வந்த ரம்யா பெற்றோர்கள் ரம்யா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரம்யாவை உறவினர் வீடுகள் முழுவதும் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.இது குறித்து வெள்ளையம்மாள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கண்டு பிடித்து தாறுமாறு புகார் செய்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகிறார்கள்.

Similar News