செய்திகள்

ராணிப்பேட்டையில் தந்தையை செங்கல்லால் தாக்கிய மகன் கைது

Published On 2016-11-15 11:01 GMT   |   Update On 2016-11-15 11:01 GMT
ராணிப்பேட்டையில் தந்தையை செங்கல்லால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது52). கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (50), மகன் நிசாத் (24).

அண்ணாத்துரைக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்று முன்தினம் இரவிலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

மனைவி சரஸ்வதியை ஆபாசமாக பேசி உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சரஸ்வதியின் இடது கையிலும், வலது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சிகிச்சைக்காக அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அண்ணாத்துரை ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு காவலாளி நிற்கும் இடத்தில் அண்ணாத் துரையின் மகன் நிசாத் நின்றார். தாயை தாக்கி விட்டு ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்த தந்தையை பார்த்ததும் அவர் ஆத்திரம் அடைந்தார்.

அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து அண்ணாத்துரையை தாக்கினார். இதில் அண்ணாத் துரைக்கு தலையிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டது. அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிசாத்தை கைது செய்தனர்.

Similar News