செய்திகள்

வீட்டு வரி ரசீது தராமல் இழுத்தடிக்கிறார்கள்: கிறிஸ்தவ மத போதகர் தர்ணா போராட்டம்

Published On 2016-11-15 16:14 IST   |   Update On 2016-11-15 16:14:00 IST
பலமுறை கேட்டும் வீட்டு வரி ரசீது தராமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கிறார்கள் என கிறிஸ்தவ மத போதகர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு:

நம்பியூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 48) கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறும் போது, ‘‘நான் நம்பியூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளேன். அதற்கு அதிகாரிகள் வீட்டு வரி ரசிது கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள். இது குறித்து பல முறை கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இங்கு தர்ணா போராட்டம் நடத்த வந்துதேன்’’ என்று கூறினார்.

போலீசார் அவரிடம் இங்கு தர்ணா போராட்டம் நடத்தக் கூடாது. உள்ளே சென்று மனு கொடுத்து விட்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் உங்களை கைது செய்வோம் என கூறினர்.

இதையொட்டி அவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து சென்று விட்டார்.

Similar News