செய்திகள்
ஈரோட்டில் தபால் நிலையங்களில் ஒரே நாளில் ரூ.2 கோடி பழைய நோட்டுகள் மாற்றம்
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடி பழைய நோட்டுகளை பொது மக்கள் மாற்றி சென்றுள்ளனர்.
ஈரோடு:
கருப்பு பணம் மற்றும் கள்ள நோடுட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் மோடி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
செல்லாத நோட்டுகளை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் அதிகாலை முதலே வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும் நீண்ட நேரம் காத்து கிடந்து பணத்தை மாற்றி செல்கின்றனர்.
இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் கடந்த 10-ந் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சக்திவேல் முருகன் கூறியதாவது:-
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து மக்கள் தபால் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோடுட்டுகளை வாங்கி செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடி பழைய நோட்டுகளை பொது மக்கள் மாற்றி சென்றுள்ளனர். பொது மக்களின் வசதிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 தலைமை தபால் அலுவலங்கள், 65 துணை தபால் அலுவலகங்களில் பண பட்டுவாடா நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.