செய்திகள்

பங்களாபுதூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2016-11-13 18:11 IST   |   Update On 2016-11-13 18:11:00 IST
பங்களாபுதூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.பாளையம்:

பங்களாபுதூர் அருகே உள்ள அரக்கன்கோட்டை நேதாஜிநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் ஏளுர் ரோட்டில் ஒரு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து கீழே போட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீர் என்று கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News