செய்திகள்

மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலி

Published On 2016-11-12 11:52 IST   |   Update On 2016-11-12 11:52:00 IST
மதுராந்தகம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே பேக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். விவசாய தொழிலாளி.

இவரது மகள் மகாலட்சுமி (வயது 8). மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மகாலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை பெற்றோர் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் காய்ச்சலின் பாதிப்பு குறையாததால் செய்யூர் அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர்.

உடனே சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Similar News