செய்திகள்

ரூபாய் நோட்டுகளை எளிய முறையில் மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன்

Published On 2016-11-12 04:03 GMT   |   Update On 2016-11-12 04:03 GMT
ரூபாய் நோட்டுகளை எளிதான முறையில் மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
அருப்புக்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அருப்புக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ள நோட்டுகளை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்டு வரவேற்கிறது. ரூ.500, 1000 நோட்டுக்களை திடீரென்று செல்லாது என்று அறிவித்ததால் சாதாரண மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

ரூபாய் நோட்டுக்களை எளிதான முறையில் மாற்றிக் கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் பயிர் செய்தவை எல்லாம் கருகி விட்டன. டெல்டா மாவட்டங்களில் சம்பா ஒரு போக சாகுபடி நடந்தது. அதுவும் கேள்விக்குறியாகி விட்டது. காவிரி நீரும் கிடைக்கவில்லை. தமிழக அரசு இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

இடைத்தேர்தலை எங்களுடன் சேர்ந்து 4 கட்சிகள் புறக்கணிக்கிறது. தே.மு.தி.க. எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News