செய்திகள்
மதுராந்தகம் அருகே லாரி மீது பைக் மோதல்: வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே லாரி மீது பைக் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது21).இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அருளுடன் திண்டிவனத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இன்று அதிகாலை இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
தொழுப்பேடு சுங்கச் சாவடி அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் பலியானார். பலத்த காயம் அடைந்த அருளுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.