செய்திகள்

பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை

Published On 2016-11-11 14:57 IST   |   Update On 2016-11-11 14:57:00 IST
பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாம்பரம்:

பீர்க்கன்கரணையில் வசித்து வருபவர் அரிராமகிருஷ்ணன். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அரிராமகிருஷ்ணன் வீட்டு கதவை உடைத்து ரூ.6 ஆயிரம், 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News