செய்திகள்
மடிப்பாக்கத்தில் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
மடிப்பாக்கம் அய்யப்பா நகரில் உள்ள ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் அய்யப்பா நகரில் ஏரி உள்ளது. இங்கு நேற்று காலையில் இருந்தே துர்நாற்றம் வீசியது. பொது மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.
இதுபற்றி மாநகராட்சி மண்டல அதிகாரியிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இன்று காலையில் மாநகராட்சி அதிகாரிகளும், மீன் வளத்துறை அதிகாரிகளும் ஏரிக்கு சென்று பார்த்தனர்.
அவர்களிடம் பொது மக்கள் கூறுகையில், “லாரியில் கொண்டு வரும் கழிவு நீரை இந்த ஏரியில் கொட்டி விடுகிறார்கள். மேலும் அருகில் உள்ள மருத்துவமனை கழிவுகளும் இந்த ஏரியில் கொட்டப்படுகின்றன. இதனால் மீன்கள் செத்து மிதக்கலாம்” என்றனர்.
ஆனால் ஏரியில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து ஏரி நீரை எடுத்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.