செய்திகள்

பெருந்துறை அருகே லாரி மோதி மொபட்டில் சென்ற வாலிபர் பலி

Published On 2016-11-10 15:45 IST   |   Update On 2016-11-10 15:45:00 IST
பெருந்துறை அருகே மொபட்டில் சென்ற வாலிபர் மீது லாரி மோதியதில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியை சேர்ந்தவர் சின்னியப்பன். இவரது மகன் செல்வகுமார் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று நள்ளிரவு இவர் மொபட்டில் துடுப்பதியில் இருந்து பெருந்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சள் வணிக வளாகம் அருகே வரும் போது எதிரே ஒரு லாரி வந்தது.

எதிர்பாராதவிதமாக அந்த லாரி செல்வகுமார் சென்ற மொபட் மீது மோதியது. இதனால் தடுமாறிய அவர் மொபட்டில் இருந்து தவறி விழுந்தார்.

இந்த நேரத்தில் லாரியின் சக்கரம் செல்வகுமாரின் தலை மீது ஏறியதால் மூளை சிதறிய அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News