செய்திகள்

சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-11-09 17:53 IST   |   Update On 2016-11-09 17:53:00 IST
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

ஈரோடு:

திண்டுக்கல் மாவட்டம், காத்துக்கொட்டம், சிறுவத்தூரை சேர்ந்தவர் தம்பி நாயக்கர் இவரது மகள் சகுந்தலா (வயது 27) சகுந்தலா கரூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

வெள்ளகோவில் முத்துக் குமார் நகரில் உள்ள குப்புசாமி மகன் பிரகாஷ் (32). பிரகாஷ் டிப்ளம்மோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

பிரகாஷ் மற்றும் சகுந்தலா இருவர் குடும்பங்களும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வெள்ளகோவிலில் வசித்து வந்னர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இருவர் வீட்டிலும் இவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சென்னிமலை வந்து மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

சென்னிமலை போலீசார் இருவர் வீட்டிற்கும் தகவல் கொடுத்து நேரில் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Similar News