செய்திகள்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்

Published On 2016-11-09 15:19 IST   |   Update On 2016-11-09 15:19:00 IST
சென்னையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையனாக மாறிய என்ஜினீயர் ரோந்து போலீசாரிடம் சிக்கினார்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம், என்.ஜி. ஓ காலனி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த என்ஜினீயர் அஸ்டின் சாமுவேல் என்பதும் சென்னையில் பல்வேறு இடங்களில் விடுதியில் தங்கி நகை பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

சிவில் என்ஜினீயரான அஸ்டின் சாமுவேல் முதலில் தனியாக என்ஜினீயரிங் நிறுவனம் நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையனாக மாறி இருக்கிறார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடுதியில் தங்கி அங்குள்ள இடங்களை நோட்டமிடுவதும், பின்னர் தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்து வந்ததாகவும் அகஸ்டின் சாமுவேல் கூறி உள்ளார்.

அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடித்த நகை, பணத்தை அவர் சொந்த ஊரில் பதுக்கி வைத்துள்ளாரா? கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடந்து வருகிறது.

Similar News