செய்திகள்
பெண்ணாடம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
பெண்ணாடம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே உள்ளது திருமலை அகரம். இந்த பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இவர்கள் தாளநல்லூரில் இருந்து பெண்ணாடம் வழியாக விருத்தாசலம் செல்லும் அரசு பஸ்களில் செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் திருமலை அகரம் கிராமத்தில் நின்று பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிச் செல்லவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் இன்று காலை 8.15 மணிக்கு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் திருமலை அகரம் கிராமத்தில் பஸ்சை நிறுத்தி மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 8.45 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது. அந்த பஸ்சிலேயே மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு சென்றனர்.