செய்திகள்

புதுவை அரசு மருத்துவமனைகளில் கவர்னர் கிரண் பேடி திடீர் சோதனை

Published On 2016-10-17 09:27 GMT   |   Update On 2016-10-17 10:42 GMT
புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி இன்று அரசு ஆஸ்பத்திரிகளுக்கு திடீர் விஜயம் செய்து நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரியின் புதிய துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிள்ளையார்சுழி போட்டு வருகிறார். தூய்மையான புதுவை என்ற இலக்குடன் அரசு பணியாளர்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த இலக்கை நிறைவேற்றுவதில் அரசு பணியாளர்கள் உரிய முறையில் ஒத்துழைக்காவிட்டால் புதுவையை விட்டு சென்று விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு இன்று திடீர் விஜயம் செய்து நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்தார். கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறி முறையிட்டனர்.

டாக்டர்கள் உரிய நேரத்தில் வேலைக்கு வருவதில்லை, தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பில் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இதை கேட்டுகொண்ட அவர் உடனடியாக அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டரை சந்தித்தார்.

மக்களின் குறைகளை உடனடியாக களையும்படி அவரை அறிவுறுத்திய கிரண் பேடி, அடுத்தமுறை நான் இங்கு சோதனைக்கு வருவதற்குள் இவை சரிசெய்யப்படவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Similar News