செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ஜெயங்கொண்டம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
ஜெயங்கொண்டம:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வேதநாயகம் (வயது 40) இவர் சென்னை மகாதானபுரத்தில் வசித்து வருகிறார். இவரது தாய் வைரம் உடையார் பாளையத்தில் தனியாக வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வைரம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டில் புகுந்து வைரத்தின் கழுத்தை கையால் நெரித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவரது மகன் வேதநாயகம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.