செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் விழுந்து முதியவர் பலி
ஜெயங்கொண்டம் அருகே காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் போது தவறி ஏரிக்குள் விழுந்து முதியவர் பலியானார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் காவலர் குடியிருப்பு அருகே வண்ணான் குட்டை ஏரியில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ மணிவண்ணன் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிந்து இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரித்ததில் இறந்தவர் சூரக்குழி கிராமம் வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணி (வயது 70) என்றும், அவருக்கு மனைவி, குழந்தைகள் யாரும் இல்லை.
உறவினர்களின் ஆதரவும் இல்லாததால் ஆண்டி மடம் பகுதிகளில் கிடக்கும் காலி மதுபாட்டில்களை சேகரித்து அதனை விற்று ஜீவனம் செய்து வந்துள்ளார் என்பதும், நேற்று முன்தினம் வண்ணான் குளம் ஏரியின் ஓரத்தில் கிடக்கும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் போது தவறி ஏரிக்குள் விழுந்து இறந்திருக்கிறார் என்று தெரியவந்தது.