செய்திகள்
எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியரிடம் நகை பறிப்பு
எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர் அனல் மின் நிலையம் 3-வது குடியிருப்பை சேர்ந்தவர் விக்ராந்தம்மா. இவர் அனல் மின் நிலையத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இன்று காலை கத்தி வாக்கம் மேம்பாலத்தில் நடை பயிற்சி மேற் கொண்டார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விக்ராந்தம்மா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.