செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிக்சர் கம்பெனி அதிபர் தற்கொலை

Published On 2016-09-01 18:28 IST   |   Update On 2016-09-01 18:28:00 IST
குன்னத்தூர் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிக்சர் கம்பெனி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

அன்னூர் குன்னத்தூர் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 55). மிக்சர் கம்பெனி நடத்தி வந்தார்.

இவர் தொழில் தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமான இல்லாததால் கடனை திரும்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக ஹரி கிருஷ்ணன் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று ஹரி கிருஷ்ணன் வீட்டில் உள்ளவர்களிம் மிச்சர் கம்பெனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். கடன் தொல்லையால் வாழ்கையில் விரக்தி அடைந்த அவர் மிக்சர் கம்பெனியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் ஹரிகிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பாததால் இவரது மகன் மிக்சர் கம்பெனிக்கு தந்தையை தேடி சென்றார். அப்போது மிச்சர் கம்பெனி உள்பக்கமாக பூட்டி இருந்தது. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது தனது தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஹரிகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News