செய்திகள்

சென்னிமலை அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் தவறி விழுந்து பலி

Published On 2016-08-29 15:53 IST   |   Update On 2016-08-29 15:53:00 IST
கணவருடன் மொபட்டில் சென்ற பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 45). இவர் இன்று காலை தனது கணவருடன் சென்னிமலை அருகே உள்ள மேலப் பாளையத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

மொபட்டை அவரது கணவர் ஓட்ட பின்னர் ஜெயந்தி அமர்ந்து சென்றார்.

இன்று காலை 9மணிக்கு அவர்கள் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் மொபட் உரசியது. இதில் மொபட்டின் பின் பகுதியில் உட்கார்ந்திருந்த ஜெயந்தி நிலை தடுமாறி மொபட்டிலிருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் மீது லாரி ஏறியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஜெயந்தி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். கணவர் கண்முன் மனைவி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான மனைவி உடலை பார்த்து கணவர் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

Similar News