ஈரோட்டில் தீக்குளித்து பெண் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு, கருங்கங்கல் பாளையம், கே.ஏ.எஸ்.நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகுமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இதே போன்று சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி தற்கொலை செய்ய முடிவெடித்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.