செய்திகள்

மனைவியுடன் தோட்டத்தில் பூ பறித்தவர் பாம்பு கடித்து பலி

Published On 2016-08-26 17:34 IST   |   Update On 2016-08-26 17:35:00 IST
மனைவியுடன் தோட்டத்தில் பூ பறித்தவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

கோபி அருகே உள்ள மாரபோயன் கரடுகக்கரா குட்டையை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது47). இவரும் இவரது மனைவி கண்ணம்மாள் (37) மற்றும் தாயார் பெரியம்மாளும் தங்களது தோட்டத்தில் கோழிகொண்டை பூ பறித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கீழே ஊர்ந்து சென்ற ஒரு வி‌ஷப்பாம்பு கருப்புசாமியை கடித்து விட்டது. இதில் வலியால் துடித்த அவரை பக்கத்து தோட்டத்துக்காரரின் உதவியுடன் ஒருகாரில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கருப்புசாமி பரிதாபமாக இறந்தார்.

தன் கண்முன் பாம்பு கடித்து கணவர் இறந்ததை கண்ட மனைவி கண்ணம்மாளும், தாயார் பெரியம்மாளும் கருப்புசாமி உடலை பார்த்து கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.

கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரித்து வருகிறார்.

Similar News